பதிவு செய்த நாள்
28
பிப்
2024
03:02
பழநி; பழநி மாசித் திருவிழாவில் மாரியம்மன் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
பழநி மாசித் திருவிழாவில் மாரியம்மன் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதம் அலங்கரிக்கப்பட்டது. கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் செல்வகுமார் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். டி.எஸ்.பி., சுப்பையா முன்னிலை வகித்தார். ரதம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பாத விநாயகர் கோயிலில் துவங்கிய ஊர்வலம் சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் திண்டுக்கல் ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு, பெரிய கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் மூர்த்தி, நிர்வாக கமிட்டி தலைவர் முருகானந்தம், சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் ஆனந்த், நகர பொதுச்செயலாளர் ஆனந்தகுமார், சரவணன் ரியல் எஸ்டேட் விஸ்வநாதன், கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.