காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மக தேர் திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2024 11:02
காரமடை அரங்கநாதர் திருக்கோவில் மாசி மக தேர் திருவிழாவில் நிறைவு நாளில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசிமகத் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழா, 17ம் தேதி கிராம சாந்தியும்,18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தேரோட்டம், பரிவேட்டை உற்சவம், தெப்போற்சவம் நடந்தது. சிறப்பாக நடைபெற்ற விழா நேற்று நிறைவு பெற்றது.