வல்லபை ஐயப்பன் கோயிலில் அரசு பொது தேர்வு மாணவர்களுக்காக சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2024 11:02
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு பூஜை நடந்தது. வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன்சுவாமி, ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தேர்விற்கான ஹால் டிக்கெட் நகல்களை கொண்டு, வல்லபை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.