ஆனையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி களரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2024 11:02
கமுதி; கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன், கருப்பணசாமி, வன்னி முத்தையா கோயில் 17ம் ஆண்டு களரி விழா நடந்தது. அங்காள பரமேஸ்வரி உட்பட தெய்வங்களுக்கு பால், சந்தனம், குங்குமம், திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து 51 கிடாய்கள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு கறிவிருந்து அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. களரி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.