Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாளுக்கியர்களின் வரலாற்றை ... வன்னிய பெருமாள் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு ஏக தின லட்சார்ச்சனை வன்னிய பெருமாள் கோயிலில் லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையின் காவல் தெய்வத்துக்கு காவலர்கள் சீர்வரிசையுடன் முதல் மரியாதை!
எழுத்தின் அளவு:
கோவையின் காவல் தெய்வத்துக்கு காவலர்கள் சீர்வரிசையுடன் முதல் மரியாதை!

பதிவு செய்த நாள்

01 மார்
2024
12:03

கோவை: கோவையின் காவல் தெய்வத்துக்கு, பெரியகடைவீதி காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசை தட்டுக்களுடன் முதல் மரியாதை செலுத்தினர்.

கோவை நகரின் முக்கிய பகுதியாக விளங்கும், கடைவீதி காவல் நிலையம் ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய எல்லையை கொண்டிருந்தது. அன்றைய கால கட்டத்திலிருந்தே, இந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசார், கோனியம்மன் கோவில் திருவிழாவில், அம்மனுக்கு முதல் மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அன்று முதல் இன்று வரை, அந்த பந்தம் தொடர்ந்து வருகிறது.

அழைப்பு; கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியர்கள் உள்ளிட்டோர் பெரியகடைவீதி காவல் நிலையத்துக்கு சென்று, தேர்த்திருவிழாவுக்கு வருகை தருமாறு, மங்கல பொருட்கள், மலர்மாலை, பரிவட்டம் ஆகியவற்றை சமர்ப்பித்து, இன்ஸ்பெக்டர் சசிகலா உள்ளிட்ட காவலர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இன்ஸ்பெக்டர் சசிகலாவுக்கு, மேளதாளங்கள் முழக்க மலர் மாலை மற்றும் பரிவட்டம் அணிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோர் கோனியம்மனுக்கு, பட்டுசேலை, மஞ்சள், குங்குமம், வளையல், மலர் மாலை, பழங்கள், இனிப்பு உள்ளிட்டவற்றை சீர்வரிசை தட்டுக்களாக கைகளில் ஏந்தியபடி, பெரியகடைவீதி காவல்நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தேர்நிலை திடலை அடைந்தனர்.

அம்மனுக்கு மரியாதை!; அங்கு தேரில் வீற்றிருக்கும் அம்மனுக்கு சமர்ப்பித்து மரியாதை செய்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்ஸ்பெக்டர் சசிகலா உள்ளிட்டோருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேர் பவனி வரும் பாதையில், தேரை இடையிடையே நிறுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தேருக்கு பின்னே கம்புகளோடு அணிவகுத்து வரும் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், மரியாதை செய்யப்பட்டது.

விலாவாரியாக விபரம் கேட்ட இன்ஸ்பெக்டர்!; பெரியகடைவீதி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சசிகலா, வெளியூரை சேர்ந்தவர் என்பதால், கோவையில் விமரிசையாக நடைபெறும், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா குறித்தும், அம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பிப்பது குறித்தும் தெரியவில்லை. ஊர் பெரியவர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். பின், கோவிலில் பணிபுரியும் போலீசாரை, திருவிழாவிற்கு தயாராகும்படி அறிவுறுத்தினார். அதன் பேரில், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி உடையணிந்து தயாராயினர். பின், அத்தனை காவலர்களும் சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக சுமந்து சென்று, காவல்தெய்வத்துக்கு மரியாதை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar