பதிவு செய்த நாள்
01
மார்
2024
12:03
இன்றைய காலத்தில் செங்கல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களைப் பயன்படுத்தி கோவில்கள் கட்டப்படுகின்றன. ஆனால் பாறையில் அமைந்துள்ள கோவில், பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அனைத்து நாட்களிலும் இங்கு தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம். இத்தகைய கோவில் எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்ள, ஆர்வமாக இருக்கும். பெலகாவி, அதானியின் பள்ளிகெரேவில் வீர பத்ரேஸ்வராகோவில் உள்ளது. இக்கோவில் மஹாராஷ்டிராவை ஒட்டியுள்ளது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு கற்பாறைகளை அடுக்கி வை த்தது போன்று தோன்றும். சாளுக்கியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. கோவிலை சுற்றிலும், அழகானகலை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நுழைவுவாயில் மேற்பகுதியில், சப்த கன்னியர்களின் சன்னிதி உள்ளது. இது சாளுக்கியர்களின் வரலாற்றை விவரிக்கும் கோவிலாகும். கோவில் முன் பகுதியில் பெரிய ஏரி அமை ந்துள்ளது. மழைக்காலத்தில் நிரம்பி கண் கொள்ளளா காட்சியாக இருக்கும். புவனேஸ்வரியின் விக்ரகமும் உள்ளது. கம்பங்களின் மீது செதுக்கப்பட்ட சிற்பக்கலை, கோவிலின் அழகை மெருகேற்றியுள்ளது. பள்ளிகேரி கிராமம், பெலகாவியின், அதானியில் இருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு 2,500 முதல் 3,000 பேர் வசிக்கின்றனர். சாளுக்கியர் காலத்து சிறப்பு, பாரம்பரியத்தை விவரிக்கிறது. அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகின்றனர். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.