வன்னிய பெருமாள் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு ஏக தின லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2024 12:03
புதுச்சேரி; முதலியார் பேட்டை ஸ்ரீ வன்னிய பெருமாள் கோயிலில் வித்யா லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது.
உலக நன்மைக்காகவும், மாணவ - மாணவியர் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறவும், கல்வி அபிவிருத்திக்காக கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏகதின சிறப்பு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஏகதின சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது, விழாவில் வித்யா லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.