பதிவு செய்த நாள்
02
மார்
2024
10:03
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது.
ராமேஸ்வரம் கோயிலில் தை அமாவாசை, ஆடி திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி மாசி மகா சிவராத்திரி விழாவுக்காக இன்று சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமர கம்பத்தில் வேத மந்திரம் முழங்க குருக்கள் உதயகுமார் கொடியை ஏற்றினார். இதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் தக்கார் பழனிக்குமார், கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், ராமநாதபுரம் ராணி லட்சுமி குமரன்சேதுபதி, பா.ஜ.,மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், ஹிந்து முன்னணி, தமிழக வி.எச்.பி., ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் ராமமூர்த்தி, சரவணன், பிரபாகரன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.