அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ருத்ரைகாதனி ஜெப ஹோமங்கள் நடைபெற்றது. அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு மண்டலாபிஷேக நாளில் ஏகாதச ருத்ர ஜப ஹோம பூஜை நடைபெற்றது. இதில் கூனம்பட்டி ஸ்ரீ கல்யாணபுரி ஆதீனம் ஜகத்குரு ஸ்ரீமத் 57வது குரு அருளாசியுடன் ஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் முன்னிலையில், திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ வேளாங்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திருப்புக் கொளியூர் ஸ்ரீ வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபன பூஜைகளுடன் ருத்ர ஜப பாராயணங்கள், அஸ்த்ர ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், மஹா பூர்ணாஹீதி ஆகியவை நடைபெற்று கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.