Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் உண்டியல் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ருத்ர ஜப ஹோம பூஜை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ருத்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்ச் 8ல் ஈஷா மஹா சிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மார்ச் 8ல் ஈஷா மஹா சிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி பங்கேற்பு

பதிவு செய்த நாள்

05 மார்
2024
10:03

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், வரும் மார்ச் 8ம் தேதி நடக்கும், மஹா சிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார். 


கோவை ஈஷாவில், 30ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா மார்ச் 8ம் தேதி மாலை, 6:00 மணி முதல் மறுநாள் காலை, 6:00 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன. இந்தாண்டு, ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இவ்விழாவில், நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவும் முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. இதில், பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர்கள் மகாலிங்கம், பஞ்சாபி இசைக்கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்சித் பட்டரசர்ஜி,. பாரடெக்ஸ் உள்ளிட்ட தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, ஆப்பிரிக்கா, லெபானன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த இசை மற்றும் நடன குழுவினரும் அரங்கை அதிர வைக்க உள்ளனர். ஈஷா மஹா சிவராத்திரி விழா, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட, 21 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கோவை தவிர்த்து, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டின், 36 இடங்களில், இவ்விழா, நேரலை ஒளிபரப்பாக கொண்டாடப்பட உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar