அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 48வது ஆண்டு மகா சிவராத்திரி விழா வரும் 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு பள்ளி மாணவியரின் பரதநாட்டியம் அரங்கேற்றம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, முதல் கால அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை துவங்கி, விடிய, விடிய நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 1:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், மறுநாள் (9ம் தேதி) அதிகாலை 3:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும் நடக்கிறது.