ஏகாதசி வழிபாடு; ஆஸ்தானம் எழுந்தருளிய காரமடை ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2024 03:03
காரமடை: காரமடை ரங்கநாதர் கோவிலில், கிருஷ்ணபக்ஷ ஏகாதசியை ஒட்டி, இன்று அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, கோ தரிசனம், கோ பூஜை, மூலவருக்கு திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம், மஞ்சள், மற்றும் மூலிகை திரவியங்களால் ஸ்னபன திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.