மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 8ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2024 03:03
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா மார்ச் 8 முதல் துவங்குகிறது.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்கரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உறிக்கப்படுவதில்லை. குடங்களில் நிறைந்து காணப்படும் நெய்யினை எறும்புகள் நெருங்குவதில்லை. இரவு பகல் அணையாத நெய் விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. குலதெய்வம் எதுவென்று தெரியாத பக்தர்கள் அம்மனை குலதெய்வமாக நினைத்து வணங்கி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிப்.16ல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கொடிமரம் நடப்பட்டது.
திருவிழா துவக்கம்: மார்ச் 8 முதல் மார்ச் 15 வரை எட்டு நாட்கள் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் வேலுச்சாமி, பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ் பாண்டியன், கனகராஜ் பாண்டியன் செய்து வருகின்றனர்.