திருவண்ணாமலையில் யோகி ராம் சுரத்குமாரின் 23ம் ஆண்டு ஆராதனை விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2024 04:03
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 23 ஆம் ஆண்டு ஆராதனை முன்னிட்டு, முதல் நாள் விழாவில் சிறப்பு யாகம் நடந்தது.
பகவான் யோகி சுரத்குமாரின் 23ம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடைபெற்றது. விழாவின் முதல் நாளில் காலை, 6:30 மணிக்கு ஹோமங்கள் மற்றும் அதிஷ்டானத்தில் அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து பஜனையும், உபன்யாசமும் நடைபெற்றது. நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.