மாகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2024 12:03
கோவை; கோவை என். எச். ரோடு - டவுன்ஹால் சந்திப்பில் உள்ள ஸ்ரீ மாகாளி அம்மன் கோவிலில் மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.