Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா ... மகா சிவராத்திரியில் திறக்கப்பட்ட கயிலாய வாயில்; குவிந்த பக்தர்கள் மகா சிவராத்திரியில் திறக்கப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

09 மார்
2024
10:03

அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

காசியில் வாசி அவிநாசி என போற்றுதலுக்குரிய தலமாகவும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என பெருமை உடைய ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். நேற்று மாலை 4:30 மணி முதல் ஐந்து முப்பது மணி வரை பிரதோஷ வழிபாடும் அதனைத் தொடர்ந்து இரவு எட்டு முப்பது மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை முதல் கால பூஜையும் இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை இரண்டாம் கால பூஜையும் நள்ளிரவு 12:30 மணி முதல் 1:30 மணி வரை மூன்றாம் கால பூஜையும் அதிகாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை நான்காம் கால பூஜையும் 5 30 மணி முதல் 6:30 மணி வரை ஊசக்கால பூஜையாக ஐந்தாம் கால பூஜை நடைபெற்றது. மேலும் அன்னதான கூட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பிரதிமாலிங்கம் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு,ஐந்து கால பூஜையில் 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கோவில் தர்பன மண்டபத்தில் சிவனடியார்கள் சிவலிங்க விக்கிரகங்களுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்தனர். மஹா சிவராத்திரி விழாவில், பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாக தரப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மஹா சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் (பொறுப்பு) மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணி முதல் தொடர்ந்து உபயதாரர்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் வளாகத்தில் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar