மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நாளை தீ மிதி விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2024 03:03
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் நாளை தீ மிதி விழா நடக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் 13 நாள் நடக்கும் மாசி பெருவிழா கடந்த 8 ம் தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது, முக்கிய விழாக்களில் ஒன்றான தீமிதி விழா நாளை (12ம் தேதி) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் தீ மிதி விழாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். இதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து வருகின்றனர். வரும் 14ம் தேதி முக்கிய திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.