பதிவு செய்த நாள்
14
மார்
2024
04:03
வாடிப்பட்டி: தனிச்சியம் பகவதி அம்மன் கோயில் 32ம் ஆண்டு பங்குனி உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோயில் முன் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். 13 நாள் விழாவில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். முக்கிய நிகழ்வாக மார்ச் 21ல் பால்குடம், 22ல் அக்னிசட்டி, 23ல் பூக்குழி இறங்குதல், வழுக்கு மரம் ஏறுதல், 24ல் விளக்கு பூஜை, 25ல் அங்கப்பிரதட்சணம், முளைப்பாரி ஊர்வலம், 26ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கமிட்டியினர் தவமணி, கோவிந்தன், பாண்டியராஜன், கிருஷ்ணன், ஊராட்சி தலைவர் பொன்னழகு, துணை தலைவர் மணிவண்ணன் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.