Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டக்குடி வைத்தியநாதசுவாமி ... வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷாவில் தமிழ் தெம்பு திருவிழா
எழுத்தின் அளவு:
ஈஷாவில் தமிழ் தெம்பு திருவிழா

பதிவு செய்த நாள்

16 மார்
2024
11:03

தொண்டாமுத்தூர்;கோவை ஈஷா யோகா மையத்தில், தமிழ் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் வகையில், தமிழ் தெம்பு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆதியோகி முன்பு, மாலை 6:00 மணிக்கு, பறையாட்டம், சலங்கையாட்டம், தேவராட்டம், தஞ்சாவூர் தவில், கரகாட்டம் போன்ற பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களின் சிறப்புகள், பக்திக்கும், கட்டட கலைக்கும் உதாரணமாக திகழும் தமிழ் கோவில்கள், தமிழ் சமூகத்திற்கு பங்காற்றிய தலைவர்களின் குறிப்புகள், பக்தியால் தமிழ் வளர்த்த நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில், அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதைத்தவிர, நாட்டு மாடுகள் கண்காட்சி, சித்த மருத்துவ குடில், பாரம்பரிய உணவு, ராட்டினங்கள் குதிரை சவாரி போன்ற அம்சங்கள், இத்திருவிழாவில் இடம் பெற்றுள்ளன. இதில் விவசாயிகள் பயன்பெறும் விதமாக, நேற்று முதல் நாளை வரை நாட்டு மாட்டு சந்தை நடக்கிறது. இதில் நாட்டு மாட்டு இனங்களை வாங்கவும், விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தெம்பு என்ற பெயரில், பெண்களுக்கான சிறப்பு கோலப்போட்டி இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க, 9442510429, 82481 28349 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். கோவை ஈஷா யோகா மையத்தில் முதல்முறையாக, நாளை (மார்ச் 17) ரேக்ளா பந்தயம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar