சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாட்படுகிறது. இந்தாண்டு விழா இன்று(16ம்தேதி) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார். 7ம் நாளான 22ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 23ம் தேதி வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு காட்சி, 24ம் தேதி ஐந்திருமேனிகள் விழா, 25ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.