கண்டேன் ராமரை..; அயோத்தி ராம ஜென்மபூமியில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2024 11:03
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் கோவிலை திறந்து வைத்தார். அன்று முதல் தினமும் பிரபு ஸ்ரீ ராம் லல்லாவை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை முதல் ராமரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு யாத்ரீகருக்கும் தடையற்ற மற்றும் விரைவான தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஸ்ரீ ராம் லல்லாவை அமைதியாக நீ்ண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.