Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கைகொண்டான் கோயிலில் புதிய ... சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

16 மார்
2024
02:03

நான்குநேரி; நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதும் ஆகும். இங்கு நித்திய எண்ணெய் காப்பு நடப்பது கோயிலின் தனி சிறப்பு. இங்கு வானமாமலை பெருமாள் மூலவர் சுயம்புவாக தோன்றியவர். இத்தலம் நம்மாழ்வாரால் 11 பாடல்கள் பாடப்பெற்றது. இத்திருத்தலத்தில் மட்டுமே ஸ்ரீசடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பூஜை சமயம் தவிர மற்ற நேரங்களில் ஜடாரி ஆசீர்வாதம் கிடையாது. திருமலை திருப்பதியில் இருந்து இங்கு எழுந்தருளிய ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கும், பெருமாளுக்கும் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி திருக்கல்யாண உற்சவம் 11 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலையில் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து எண்ணெய்காப்பு காலை சந்தி முதலியவைகள் நடந்தன. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கொடிமரத்திற்கு அருகில் ஏழுந்தருளினார். கொடிப்பட்டம் பல்லக்கில் எடுத்து வரப்பட்டு கொடிமரம் முன் வைக்கப்பட்டு கும்ப பூஜையை அடுத்து கொடியேற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தீர்த, ஜடாரி, பிரசாத வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நான்குநேரி வானமாமலை மடத்தின் 31 வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. 5ம் திருநாள் கருடசேவையும், 7ம் திருநாள் தங்க பல்லக்கும், கண்ணாடி சப்பரமும், 9ம் திருநாள் திருத்தேரும், அன்று இரவில் பெருமாள் தாயார் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி உத்திர நாளில் தீர்த்தவாரி மற்றும் பட்டணபிரவேசம் நடக்கிறது.ஏற்பாடுகளை ஜீயர் மடத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar