திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தின் வடகரையில், இடிந்து விழுந்த சுவர் பகுதியில், மண் அரிப்பு ஏற்படாத வகையில், தற்காலிகமாக சரி செய்தனர். திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளம் வடகிழக்கு பருவமழையால், 23ம் தேதி இரவு இடிந்து விழுந்தது. இதனால் திருவாரூரில் இருந்து கும்பகோணம் வழியாக இயக்கப்பட்ட பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் இயக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்காலிகமாக மரக் கிளைகள் மூலம் தடுப்புக் கட்டைகள் அமைத்து, கீழே விழுந்த பகுதிகளை தற்காலிகமாக சரி செய்தனர்.