ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே அனுச்சகுடி காளியம்மன் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, நேற்று மூலவர்கள் காளியம்மன், உடைய நாயக அய்யனார், கருப்பர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து கோயிலில் காப்பு கட்டப்பட்டு, பங்குனி உத்திர விழா துவங்கியது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.