கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் 429-வது உற்சவம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராகவேந்திரரின் அவதரித்த தினமான 16ம் தேதி சுவாமி சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் குரு ராகவேந்தர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகவேந்திர சுவாமியை தரிசனம் செய்தனர்.