மூன்று யுகங்களை கண்ட அயோத்தியில் ராமருக்கு அதிகாலை நடைபெற்ற சிறப்பு ஆரத்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2024 11:03
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
மூன்று யுகங்களை கண்ட பழைமையான நகரம் அயோத்தி. திரேதாயுகத்தில் துவங்கி ஸ்ரீராமரின் முன்னோர்கள் முதல் துவாபரயுகம், கலியுகம் என சிறப்புடன் வழிபடப்பட்டு வருகிறார் ராமர். இங்கு தற்போது ராமர் லல்லாவுக்கு தினமும் 6 ஆரத்திகள் நடைபெறுகின்றன. இதில் காலை 4:30 மணிக்கு மங்கள ஆரத்தி, 6:30 மணிக்கு சிருங்கார் ஆரத்தி, மதியம் 12 மணிக்கு ராஜ்போக் ஆரத்தி, மதியம் 2 மணிக்கு உத்தபன் ஆரத்தி, இரவு 7 மணிக்கு சந்தியா ஆரத்தி, இரவு 10 மணிக்கு ஷயன் ஆரத்தி ஆகியவை அடங்கும். ராம் லல்லாவுக்கு வழங்கப்படும் காலை ஆரத்தி தினமும் காலை 6:30 மணி முதல் டிடி நேஷனலில் நேரடியாக ஒளிபரப்ப பட்டு வருகிறது. இன்று அதிகாலை ஆரத்தியை பக்தர்கள் கோயிலிலும், தங்கள் வீட்டில் இருந்தும் பரவசத்துடன் தரிசித்தனர்.