புருஷாமிருக வாகனத்தில் வீதி உலா வந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2024 12:03
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக வாகனத்தில் வீதி உலா வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று காலை வெள்ளி புருஷாமிருக வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 22ம் தேதி நடக்கிறது. 23ம் தேதி அங்கம் பூம்பாவை உயிர்ப்பித்த ஐதீக விழா, 24ம் தேதி பிச்சாடனார் விழா, 25ம் தேதி மாலை கற்பகாம்பாள் மயில் வடிவில் சுவாமியை பூஜிக்கும் ஐதீக விழா மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது.