கோவையில் கொடியேற்றத்துடன் துவங்கியது முனியப்பன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2024 01:03
கோவை, கோவை டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் பல நூற்றாண்டு பெருமை வாய்ந்த ஸ்ரீ முனியப்ப சாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று செவ்வாய்க்கிழமை விநாயகர் வேள்வி பூஜையுடன் துவங்கிய விழாவில் 108 கலச பூஜை, அபிஷேகம், தீபாராதனை அன்னதானத்துடன் விழா நடந்தது. இன்று சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு உடன் சுவாமி திருவீதி உலா வந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முனியப்ப சாமியை ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். நாளை மஞ்சள் நீராட்டுடன் அன்னதானம் நடைபெறுகிறது.