மயிலாடுதுறை செல்வ விநாயகர், தேடி வந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2024 03:03
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர், சமுத்திர விநாயகர், தேடி வந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சித்தர்காடு பனந்தோப்பு தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சமுத்திர விநாயகர், ஸ்ரீ தேடிவந்த மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று புரணாஷூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.