பதிவு செய்த நாள்
20
மார்
2024
03:03
கூடலூர்; கூடலூர், புளியாம்பாறை மட்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
கூடலூர், புளியம்பறை மட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 7:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 3:00 மணிக்கு முளைப்பாரி மற்றும் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 4:30 மணி முதல் சிறப்பு பூஜைகளும், முதல் கால பூஜை, பூர்ணாகுதி தீபாதாரணை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 8:30 மணி முதல் சிறப்பு பூஜைகளையும் தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மூன்றாம் கால யாகபூஜை, சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று காலை 6:30 மணிக்கு, விக்னேஸ்வரா பூஜை, யாக பூஜைகள் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.