காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2024 03:03
காரைக்குடி; காரைக்குடி, மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பால்குட திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், 68 வது மாசி பங்குனி திருவிழா கடந்த மார்ச் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். தொடர்ந்து கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், இன்று முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. முத்தாலம்மன் கோயிலில் தொடங்கி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் கூட்டம் இடைவெளியின்றி காணப்பட்டது. தொடர்ந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் கரகம், பால்குடத்தை தொடர்ந்து பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நகர் முழுவதும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், சேவைக் குழுவினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.