பதிவு செய்த நாள்
20
மார்
2024
03:03
கடையநல்லுார்; கடையநல்லுார் பூமிநீளா சமேத நீலமணிநாதர் (கரியமாணிக்கப்பெருமாள்) கோயிலில் மஹா ஸம்ப்ரோஷணம் இன்று நடைபெற்றது.
கடையநல்லுார் கரியமாணிக்கப்பெருமாள் என்ற நீலமணிநாதர் கோயிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மஹா ஸம்ப்ரோஷணம் இன்று (20ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை அனுக்ஞை, புண்யாகவாசனம், மாலை முதல் இரவு வரை யஜமானர் அழைப்பு, யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன், மஹா ஸம்ப்ரோஷண விழா துவங்கியது. கோயிலில் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை புண்யாகவாசனம், மூர்த்தி ஆவாஹணம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 6 மணிமுதல் 9 மணி வரை புண்யாகவாசனம், நித்ய திருவாதாரனம், நித்யஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்நது. 9.36மணி முதல் 10.53 மணிக்குள், விமான ராஜகோபுரம் மகா ஸம்ப்ரோஷணம் நடைபெற்றது. 11 மணி முதல் மதியம் 1 மணிவரை விசேஷ திருவாதாரனம், மகதாசிர்வாதம், ப்ரம்மகோஷம் நடந்தது. ஏற்பாடுகளை கடையநல்லுார் கிராம மகாஜனங்கள் செய்துள்ளனர்.