முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2024 03:03
பந்தலூர்; பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் உள்ள மகா ஸ்ரீ சக்தி முனிஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 20 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுத்தி புண்யாஹம், சுதர்சன ஹோமம், பகவதி சேவை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து மறுநாள் கணபதி ஹோமம் தில ஹோமம், காயத்ரி ஹோமம், மத்திய கால பூஜை மற்றும் பகவதி சேவை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இன்று காலை திறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோழிக்கோடு கண்ணாடி இல்லத்து ஸ்ரீ சம்பு நம்பூதிரி தலைமையிலான குழுவினர், முனீஸ்வரர் பிரதிஷ்டை பூஜை மற்றும் கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினார்கள். இதில் பந்தலூர் மற்றும் தேவாலா சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் தனஜெயன், கௌரவ ஆலோசகர் ஹரிஹரன், செயலாளர் பிஜு, பொருளாளர் மோகன் தலைமையிலான கோவில் கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.