பதிவு செய்த நாள்
23
மார்
2024
01:03
ஓசூர்; கெலமங்கலம் அருகே, நாகமுனேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஒன்னகுறிக்கி கிராமத்தில், நாகமுனேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை, 11:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 10:00 மணிக்கு, ஒன்னகுறிக்கி கிராம மக்கள் சார்பில், முத்து பல்லக்கு சேவை, பூ கரகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம், 12:15 மணிக்கு நடந்தது. தேரில் உற்சவர் மூர்த்தி அமர வைக்கப்பட்டு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. ஒன்னகுறிக்கி, ஜெக்கேரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதி பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.