பந்தலூர் முருகன் கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2024 12:03
பந்தலூர்; பந்தலூர் அருகே பந்தபிலா கிராமத்தில் ஸ்ரீ திருக்குமரன் ஆலய ஒன்பதாம் ஆண்டு தேர் திருவிழா 24ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளும் பிரசாதம் வழங்குதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை விளக்கு பூஜை தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையும் அதனை தொடர்ந்து பொன்னானி ஆட்டங்கரையில் இருந்து பால்குடம், பன்னீர் குடம், தீர்க்க குடம், பறவை காவடி மற்றும் காவடி எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பக்தர்கள் பக்தியுடன் பங்கேற்று முருகன் பாடல்களை பாடி கொதிக்கும் வெயிலில் கோவிலுக்கு காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்துச் சென்றது மக்களை கவர்ந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அன்னதானமும், மாலை தேர் ஊர்வலமும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மவர்த்தா அடைக்கலம், தலைவர் பீமன், செயலாளர் மோகன், பொருளாளர் யோகராஜ் தலைமையிலான விழா கமிட்டிளர் மற்றும் இளைஞர் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.