காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2024 10:03
மேலுார்; மேலுார் ஆர்ய வைஸ்ய சமூக காளியம்மன் கோயில் பங்குனி மாத பொங்கல் திருவிழா நேற்று துவங்கியது. பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது. பிறகு அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.