சென்ன கேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2024 10:03
காரியாபட்டி; மல்லாங்கிணரில் 800 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சென்ன கேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செங்கமலத் தாயார் சென்ன கேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், குதிரை, கருட வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 22ல் திருமஞ்சனம் முடிந்தவுடன், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. மாலை 5.30க்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி திருத்தேரில் அமர்ந்து, முக்கிய வீதி வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு 7.10க்கு தேர் நிலையத்தை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.