அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில், ரங்கோத்சவ், பிரமாண்ட ஹோலி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முதல் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு ஹோலி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்படும் என தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று கோலாகமாக விழா கொண்டாடப்பட்டது. கோவிலில் பால ராமருக்கு வண்ண பொடிகள், பூக்கள் தூவி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ரங்கோத்சவ் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.