திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2024 10:03
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோத்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது.
நடுநாட்டு திருப்பதி என வைணவ பக்தர்களால் போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 8:40 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தேரடியை வந்தடைந்தார். அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வேதமந்திரம் முழங்க 9:30 மணிக்கு ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் தேரோட்டம் துவங்கியது. கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் மாடவீதி வழியாக தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். ஆங்காங்கே மண்டகப்படி நடந்தது. மாலை 4:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.