சமயபுரம் மாரியம்மன் கோயில் விழா; பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2024 04:03
தேவகோட்டை; தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி முளைப்பாரி விழா கடந்த 19 ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து அம்மனுக்கு வெவ்வெறு அம்மனின் உருவத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்விக்கப்பெற்று பூஜைகள் நடைபெற்றன. தினமும் மாலை அம்மன் கரகம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. அக்னிச்சட்டி, அக்னிக்காவடி, எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாளான இன்று மதியம் பக்தர்கள் பால்குடம், வேல்காவடிகள் எடுத்து வந்து அம்மன் சன்னதி முன்பு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் முன்பு முளைக்கொட்டி பாடி வழிப்பட்டனர். நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பெற்று பூஜைகள் நடந்தன