திருப்பதி கோயிலில் ஏப்ரல் மாத விசேஷ தினங்கள் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2024 05:03
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் விசேஷ தினங்கள் குறித்து விவரத்தை திருமலை ஸ்ரீவாரி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி.. கோயிலில் ஏப்ரல் 5 ஆம் தேதி ஸ்ரீ அன்னமாச்சார்யா, - ஏப்ரல் 7ம் தேதி மாசாசிவராத்திரி, ஏப்ரல் 8 ஆம் தேதி சர்வ அமாவாசை, ஏப்ரல் 9 அன்று ஸ்ரீ க்ரோதிநாம சம்வத்சர உகாதி, ஸ்ரீவாரி கோயிலில் உகாதி ஆஸ்தானம், ஏப்ரல் 11ம் தேதி மத்ஸ்யஜெயந்தி. ஏப்ரல் 17 ஆம் தேதி ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், ஏப்ரல் 18ஆம் தேதி ஸ்ரீராமபட்டாபிஷேக ஆஸ்தானம், ஏப்ரல் 19 ஆம் தேதி சர்வ ஏகாதசி, ஏப்ரல் 21 முதல் 23 வரை வசந்த விழா நடைபெறுகிறது.