காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் காணிக்கை எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2024 05:03
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் . இந்த நிலையில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையை கணக்கிடும் பணியில் இன்று காலை முதல் மாலை வரை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதில் கடந்த 14 நாட்களுக்கு கிடைத்த வருமானம், ரொக்கப் பணமாக ரூ78,39,048 எழுவத்து எட்டு லட்சத்து முப்பத்து ஒன்பது ஆயிரத்து நாற்பத்தி எட்டு ரூபாய் இருந்தது. மேலும் தங்கம் :-14. கிராம். வெள்ளி :- 910. கிராம். கோ பாதுகாப்பு உண்டியல் மூலம்- ரூ5,409. நித்ய அன்னதானம் உண்டி மூலம் ரூ20,190. வெளிநாட்டு பணம் யு.எஸ்.ஏ - 1,066 டாலர்கள். இங்கிலாந்து - 15 பவுண்டுகள். ஆஸ்திரேலியா - 50 டாலர்கள். மலேசியா - 1 ரிங்கிட்ஸ். கோயில் உண்டியல் வருமானமாக வந்ததாக கோவில் செயல் அலுவலர் ஏ. வெங்கடேசு கூறினார்.