கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2024 01:03
கோவில்பட்டி; கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா வரும் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதையடுத்து, முகூர்த்தக்கால் நடும் விழாநேற்று நடந்தது. காலை5:00 மணி முதல் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. காலை11:00 மணியிலிருந்து 11:20க்குள் முகூர்த்தக்கால் நாட்டப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், கோயில் அறங்காவல்குழு தலைவர்ராஜகுரு, அறங்காவலர்கள் சுபாஷ் சண்முகராஜ், திருப்பதி ராஜா, நிருத்தியலட்சுமி, ரவிந்திரன், செயல் அலுவலர் வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பங்குனி திருவிழா வரும் 5ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 6:30க்குள் மீனலக்கனத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிறது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா13ம் தேதி காலை 6:45 மணிக்கு மேல் 7:25 மணிக்குள் நடக்கிறது.