சிம்மவாகனத்தில் திருநீர்மலை ரங்கநாத பெருமாள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2024 01:03
திருநீர்மலை: ர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் பங்குனி பெருவிழா பிரமோற்சவத்தை முன்னிட்டு நீர்வண்ண பெருமாள் சிம்மவாகனத்தில் வீதிஉலா வந்தார்
திருநீர்மலையில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று பிரமோற்சவத்தை முன்னிட்டு நீர்வண்ண பெருமாள் சிம்மவாகனத்தில் வீதிஉலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான வரும் 31ம் தேதி கருட சேவை, 7ம் நாள்தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.