காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2024 12:04
கோவை; காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவில் 84ம் ஆண்டு உற்சவ திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவானது வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நிறைவடைகிறது. விழா முதல் நாளில் மூலவர் அம்மன் வெள்ளி காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.