கோட்டை முனியப்பன் பொங்கல் விழா : கிடா வெட்டி பக்தர்கள் வழிபட்டனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2024 05:04
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த தொரவலூர் ஊராட்சியில் புகழ்பெற்ற கோட்டை முனியப்பன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு பொங்கல் திருவிழா, கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 2ம் தேதி இரவு அவர பாளையத்தில் இருந்து, மேளதாளங்கல் முழங்க சக்தி கரகம் படைக்கலம் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இன்று 3ம் தேதி பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. இதில் முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, அப்பகுதியை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் சுமார் ஐநூறுக்கு மேற்பட்டோர் கிடா வெட்டி முனியப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். முனியப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் 2 மணி முதல் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. 5 ம் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.