பதிவு செய்த நாள்
03
ஏப்
2024
04:04
அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பட்டாளம்மன், முத்துக்கன்னி, கருப்புசாமி, கோயில் 60ம் ஆண்டு பங்குனி உற்ஸவ விழா ஏப்.,2ல் துவங்கியது. வான வேடிக்கை, மேளதாளம், முளைப்பாரி ஊர்வலத்துடன் சுவாமியை கோயில் அழைத்து வந்தனர். சுவாமி சிலை செய்து பூ, பட்டு, சந்தனம், குங்கும அலங்காரம் நடந்தது. இன்று பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இன்று(ஏப்.,4)அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.