மேட்டுப்பாளையம் குண்டத்து காளியாதேவி கோவிலில் மறுபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2024 10:04
மேட்டுப்பாளையம்; குண்டத்து காளியாதேவி கோவிலில், குண்டம் விழா மறுபூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் விழா, கடந்த மாதம், 12ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 27ம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜை செய்தனர். கோவில் தலைமை பூசாரி பழனிசாமி, அருள்வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் மறு பூஜை செய்தனர். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.