Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோயில் தேர் ... தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள் தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா; தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா; தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2024
01:04

இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து தீச்சட்டிகள் கரும்பாலை தொட்டில் செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். நாளை இரவு 7:10 மணிக்கு மேல் மணிக்கு மேல் மின் அலங்கார தேர் பவனி நடைபெற உள்ளது.

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தீச்சட்டி, கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்தாண்டிற்க்கான திருவிழா கடந்த 28ம் தேதி இரவு 10:50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா இன்று நடைபெற்றது. நேற்று இரவு முதலே தாயமங்கலத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு பொங்கல் வைத்து தீச்சட்டிகள், ஆயிரம் கண் பானை,கரும்பாலை தொட்டில், பால்குடங்கள் போன்றவற்றை ஏந்தி கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்து அம்மனை வழிபட்டனர். பின்னர் ஆடு கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் கோவிலில் அதிகளவு கூட்டம் இருந்ததையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். நாளை இரவு 7: 10 மணிக்கு மேல் மின் அலங்கார தேரோட்டமும், 6ம் தேதி காலை 7:40 மணிக்கு பால்குடம் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லாக்கும் நடைபெற உள்ளது.7ம் தேதி கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவை ஒட்டி மானாமதுரை, சிவகங்கை,இளையான்குடி, மதுரை, அருப்புக்கோட்டை,காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவம் இன்று சிறப்புடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளம் மழை நீர் சேகரிப்பால் நிறைந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar