எர்ரம்படியில் பங்குனி உற்ஸவ விழா; முளைப்பாரி எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2024 04:04
அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் அருகே எர்ரம்பட்டியில் முத்தாலம்மன், காளியம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா ஏப்.,3ல் துவங்கியது. நாட்டாமை வீட்டில் இருந்து பூ பெட்டி, நகை பெட்டியை மேளதாளம், வான வேடிக்கையுடன் கோயிலுக்கு எடுத்து வந்தனர். முத்தாலம்மன் கண் திறப்பு நடந்தது. சாத்தையாறு ஓடையில் காளியம்மனுக்கு கரகம் ஜோடித்து கோயில் அழைத்து வந்தனர். இன்று காலை பக்தர்கள் முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்தும்,பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (ஏப்.,5) ஊர்வலமாக எடுத்து சென்று முளைப்பாரி கரைத்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.